இன்று சிறுவர் வன்கொடுமைக்கு எதிரான தேசிய தினம்

 


சிறுவர் வன்கொடுமைக்கு எதிரான தேசிய தினம் இன்றாகும். 

சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் அவர்களுக்கான சிறந்ததொரு சூழலை உருவாக்குவது இந்த நாளின் நோக்கங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிகமாக வீடுகளிலேயே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 

அத்துடன், கடந்த சில நாட்களாக உளநல வைத்தியசாலைகளுக்கு வருகைதரும் சிறுவர்களில் பலர் புகையிலை போன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் பாவனையானது சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட உளநல வைத்தியர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments