ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உலகின் மூத்த வீராங்கனையான ஆக்னஸ் கெலெட்டி காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடல் நலக்குறைவு காரணமாக ஹங்கேரியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக கூறப்படுகிறது.
தமது 104 ஆவது வயதில் ஆக்னஸ் கெலெட்டி காலமாகியுள்ளார்.
ஆக்னஸ் கெலெட்டி 1952 ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் வென்றார்.
ஜிம்னாஸ்டிக் சாம்பியனான ஆக்னஸ் கெலெட்டி, 05 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.
0 Comments