தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த "ஸ்மார்ட் யூத் நைட்" இசை நிகழ்ச்சித் தொடருக்காக மொத்தம் 320 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் செலவிடப்பட்டமை தெரியவந்துள்ளது.
இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்பட்ட கணக்காய்வின்போது, இந்த செலவு விபரம் கண்டறியப்பட்டுள்ளது.
மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மையம், காலி, அம்பாறை, குளியாப்பிட்டி, புத்தளம், தம்புள்ளை, யாழ்ப்பாணம், மஹியங்கனை, ஹட்டன், ஹிகுரக்கொட, பண்டாரவளை, வெலிசர, கொழும்பு பந்தய மைதானம் மற்றும் கெத்தாராம மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த இசை நிகழ்ச்சித் தொடர் நடைபெற்றது.
சம்பந்தப்பட்ட காலகட்டத்தில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், அப்போதைய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கப்பட்டது..
இந்தநிலையில் குறித்த கணக்காய்வு அறிக்கை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இளைஞர் விவகார துணை அமைச்சர் எரங்க குணசேகர, இந்த கணக்காய்வு வெளிப்பாடு குறித்து முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
0 Comments