விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம்!
இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ் வேலைத்திட்டமானது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.
இச் செயலணியில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட 18 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
"தூய்மையான இலங்கை(Clean Sri Lanka)" திட்டத்தை திட்டமிடுதல் , வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் இச் செயலணியின் பொறுப்புகளாகும்.
0 Comments