மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த நபர் ஒருவர்  மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மாத்தளை, மஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொனரவில பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (30) காலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் மாத்தளை, மொனரவில பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார். இவர் நேற்றைய தினம் காணி ஒன்றிலிருந்த மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த போது அருகிலிருந்த மின்சாரக் கம்பிகள் மீது மோதியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலமானது மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Post a Comment

0 Comments