ஜனாதிபதி நிதியம் 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய வளாகத்திற்கு மாற்றப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போது,கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள லேக் ஹவுஸ் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தற்போது அமைந்துள்ள ஜனாதிபதி நிதியம், ஜனாதிபதி மாவத்தையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு எதிரே உள்ள கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஸ்டோண்டர்ட் சார்ட்டர் கட்டிடத்தின் தரை தளத்திற்கு மாற்றப்படுகிறது
எனவே, 2025 ஜனவரி முதலாம் திகதி முதல், ஜனாதிபதி நிதியிலிருந்து சேவைகளை நாடும் பொதுமக்கள் புதிய அலுவலகத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிக பயன்
முன்னதாக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முன்னாள் அரசாங்க அரசியல்வாதிகள் அதிக பயன்பெற்றமை குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments