(2025)ஐசிசி செம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள  தென்னாபிரிக்க அணி



சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 2 விக்கட்டுக்களால் இன்று வெற்றி பெற்று, 2025 சர்வதேச கிரிக்கட் சம்மேளன டெஸ்ட் கிரிக்கட் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

முன்னதாக, போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 211 ஓட்டங்களை பெற்றது.இதற்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் 301 ஓட்டங்களை பெற்றது.இந்தநிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானிய அணி, தமது இரண்டாவது இன்னிங்ஸில் 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனையடுத்து பாகிஸ்தானிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, 8 விக்கட்டுகள் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.


Post a Comment

0 Comments