160 கோடி மோசடி செய்த தம்பதியினர் சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டுநாயக்கவில் கைது.

சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

இந்நிலையில், இருவரையும், விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1.6 பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை குறித்த தம்பதியினருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் வியாழக்கிழமை (26) இந்தியாவிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் நேற்று கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பிரிவெல்த் குளோபல் எனும் நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்துள்ள சந்தேக நபர்கள் அதிக இலாபத்தை பெற்றுத்தருவதாக்கூறி 160 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் குறித்த நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments