ரயில் மற்றும் பஸ்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு பதிலாக QR CODE முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்குள் புதிய செயற்றிட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
சில பகுதிகளில் பயணிகளிடம் அறிவிடப்படும் கட்டணங்களை சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் உரியவாறு டிப்போக்களில் சமர்பிப்பதில்லை என போக்குவரத்து அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக புதிய தொழில்நுட்பத்தினூடாக பயணிகளிடமிருந்து போக்குவரத்து கட்டணத்தை அறிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
0 Comments