உக்ரைனுடனான போரினால் அமெரிக்காவின் KFC ரஷ்யாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து, ரஷ்யா அதற்கு எதிராக புதிய நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட கேஎப்சி சிக்கன் உலகம் முழுதும் மிக பிரபலமானது.
மேலும் அதற்கு உலகம் முழுவதும் பல கிளைகள் இயங்கி வருகின்றன.
உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலால் அமெரிக்க துரித உணவு சங்கிலி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் KFCயின் ரஷ்ய அவதாரமாய், ரஷ்யா தனது முதல் உணவகத்தை மாஸ்கோவில் திறந்துள்ளது.
ரஷ்யா முழுவதிலும் உள்ள அமெரிக்க நிறுவனமான முன்னாள் உணவகங்களின் புதிய உரிமையாளர்கள், சோவியத்துக்கு பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில் ரஷ்யாவில் தோன்றிய பிராண்டான ரோஸ்டிக்ஸை மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர்.
மத்திய மாஸ்கோவில் நடைபெற்ற திறப்பு விழாவில், வெளியிடப்பட்ட ROSTICன் லோகோ KFCயின் நிறுவனர் கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ் லோகோவில் இல்லை.ஆனால் புதிய வண்ணத்தில் இருக்கிறது.
"எங்களுக்கு ரோஸ்டிக் குழந்தை பருவ நினைவை தூண்டுகிறது" என்று 31 வயதான மென்பொருள் சோதனையாளரான எவ்ஜெனி லாசரேவ் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
முதலில் 1993 இல் தொடங்கப்பட்ட ரோஸ்டிக் நிறுவனம், ரஷ்யாவில் KFCயோடு இணைந்து செயல்பட்டுள்ளது. தற்போது அவை தனித்து செயல்பட ஆரம்பித்துள்ளது.
1991ல் சோவியத் ஒன்றியத்தின் சரிவைத் தொடர்ந்து, உலக நாடுகளின் சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறினர்.
தற்போது இந்த ரோஸ்டிக்ஸ் மீண்டும் சோவியத் யூனியனின் ஆட்சிக் காலத்தை நினைவுபடுத்துவதாக கூறியுள்ளனர்.
மற்றொரு வாடிக்கையாளரான வலேரியா வரிஜினா, ’மேற்கத்திய ராட்சசர்கள் வெளியேறுவது தனது வாழ்க்கையை பாதிக்காது.
இது 21 ஆம் நூற்றாண்டு, ரஷ்யாவில் அனைவருக்கும் போதுமான உடைகள், பானங்கள் மற்றும் உணவு எப்போதும் இருக்கும்.’ என்று அவர் கூறியுள்ளார்.
1,000க்கும் மேற்பட்ட உணவகங்களுடன், KFC ரஷ்யாவின் மிகப்பெரிய துரித உணவு சங்கிலியாக இருந்தது. எனினும் உக்ரைன் போரினால் ரஷ்யாவில் அது தடை செய்யப்பட்டது.
0 Comments