கட்டுநாயக்க விமான நிலையத்தில் C17 Globemasterஇல் எடுத்துவரப்பட்ட அதிசக்தி வாய்ந்த கருவிகள்

இலங்கையில் அமெரிக்காவிற்கு ஆதரவான அரசாங்கமொன்றை வைத்திருக்கும் தேவை அமெரிக்காவிற்கு உள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதை போன்று வெளியில் இருந்து வந்து இலங்கையை யாராவது அழிக்க பாதிப்பிற்கு உள்ளாக்க முடியாதவாறு இலங்கைக்குள் வருவோர், போவோர் அனைவரையும் கவனிக்க வேண்டி பொறுப்பையும் கூட அமெரிக்கா எடுத்திருக்கிறதோ என அமெரிக்காவின் நடவடிக்கையை பார்க்கும் போது தெரிகின்றது.

நேபாளத்திற்கு சென்ற விமானமாக இருக்கலாம் அல்லது இலங்கைக்கு வந்த விமானமாக இருக்கலாம் இலங்கையில் இருக்கின்ற தரப்பும் கூறுகிறது, நேபாளத்தில் இருக்கின்ற தரப்பும் கூறுகிறது பெருமளவான ஆயுதங்கள் கருவிகள் வந்ததாகவும், அவை என்ன என்று தெரியாது எனவும்.

இப்போது தான் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக வெளிவருகிறது இதில் ஒன்று தான் பயோமெட்ரிக் எமிக்ரேசன் கன்ரோல் யுனிஸ் சிஸ்டம் என்பது. இதனை விட வேறு என்னென்ன கொண்டு வரப்பட்டதோ தெரியாது.

அதேநேரம் நீர்மூழ்கி கப்பலுக்கான சில உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments