சலவை தூள் பக்கட்களினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடை செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் சுற்றாடல் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க கூறுகையில்,
20 கிராம் மற்றும் 20 மில்லி சலவை தூள் மற்றும் திரவ பக்கட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 250 கிராம், 500 மற்றும் கிலோ பக்கட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த வகை பொலித்தீன் பாவனையை குறைப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீர் நிலங்களில் சலவை தூள் பக்கட்களை அதிகளவில் வீசுவதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments