தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் (03.04.2023) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தரம் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையில் புதிதாக மாணவர்களைச் சேர்ப்பது குறித்து எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுவரை தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான கடிதங்களைக் கல்வி அமைச்சு வழங்காது எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments