ஏராளமான மக்கள் பயணிக்கும் கோட்டை மேம்பாலம் தற்போது பல இடங்களில் சேதமடைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்த போதிலும் பல தடவைகள் வருகைத்தந்து சேதமடைந்த இடங்களை அடையாளப்படுத்திச் சென்றுள்ளனர். எனினும், இதுவரையிலும் குறித்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
அண்மையில், கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பெருமளவானோர் பாலத்தில் ஏறியதாக அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
விபத்து ஏற்படும் முன், பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments