பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டுள்ள 400 பேருக்கு உடனடியாக ஆசிரிய நியமனங்களை வழங்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

 


பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டுள்ள 400 பேருக்கு உடனடியாக ஆசிரிய நியமனங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள எழுத்து மூல கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென உள்வாங்கப்பட்ட 4,000 ஆசிரிய உதவியாளர்கள் உரிய பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர், பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், துரதிஷ்டவசமாக அவர்களில் 400 பேர் இதுவரையில் எந்தவொரு பாடசாலையிலும் நியமன ஆசிரியர்களாக உள்வாங்கப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

ஆகவே, இவ்விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள 400 பேரையும் ஆசிரியர்களாக உள்வாங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றும் அந்த கோரிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments