பஸ்யால - கிரியுல்ல பிரதான வீதியில் கோர விபத்து! நால்வர் வைத்தியசாலையில்
பஸ்யால - கிரியுல்ல பிரதான வீதியின் மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இப்பகுதியில் 8 முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது தடுப்பான் செயலிழந்ததால் பூம் ட்ரக் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூம் ட்ரக்கின் தடுப்பான் செயலிழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.
மேலும், டிரக்கின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments