அரசு விருது வழங்கும் விழாவில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் வரை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடந்தது என்ன?

மகாராஷ்டிராவில் திறந்தவெளியில் நடந்த விருது வழங்கும் விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் வரை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு அரசு விருது (மகாராஷ்டிரா பூஷன் விருது) வழங்கும் விழா நடந்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று விருது வழங்கினார்.

நவி மும்பையில் உள்ள பிரமாண்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதனால் கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தனர். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கடும் வெயிலால் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மும்பையில் நேற்று அதிகபட்சமாக 34.1 டிகிரி செல்ஷியல் வெயில் பதிவாகி உள்ளது. இதுவழக்கத்தைவிட ஒரு டிகிரி அதிகமான வெயில் நேற்று மும்பையில் பதிவாகி உள்ளது.

Post a Comment

0 Comments