பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் என். எம்.கே.ஹரிச்சந்திர பத்மசிறி இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மே 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 சதவீதம் தொடக்கம் 8 சதவீதம் வரையில் கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments